நடிகை சாந்தினி நடன இயக்குநர் நந்தாவைத் திருப்பதியில் இன்று திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் சித்து +2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. இதனைத் தொடர்ந்து வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் தற்போது வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் வில் அம்பு, இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த நந்தா என்பவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் 9 வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள்.
பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் ஏற்கெனவே முடிந்த நிலையில் இன்று இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இதில் இருவரது வீட்டாரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.