‘களவாணி 2’ திரைப்படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடை விதித்துள்ளது.
இத்திரைப்படத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் ‘களவாணி 2’ படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இத்திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘களவாணி’. இதன் தொடர்ச்சியான ‘களவாணி 2’ திரைப்படத்தில் ஓவியாவுக்கு சிறந்த கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல், ஓவியா நடிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படம் அரசியல் கலந்த கதையம்சமாகும்.
இத்தில் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இதன் இணை்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் சுது விக்னேஷ்காந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.