ரஜினியை வைத்து 2.0 படத்தினை இயக்கம் செய்த ஷங்கர் தற்போது இந்தியன் 2 வை கையில் எடுத்துள்ளார். 2.0 தயாரித்த அதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் கமலை வைத்து படம் எடுக்கவுள்ளார்.
ஷூட்டிங் முன்பே தொடங்கிய நிலையில் சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன் பின்பு இந்த வாரம் சென்னையில் திட்டமிட்டபடி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங்கும் தொடங்கவில்லை.
அதனால் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது என தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு 40 கோடி ருபாய் என்றும் ஷங்கரும் அதற்கு சமமாக 40 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.