நடிகர் கமல்ஹாசன் தன் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளில் பிசியாகவுள்ளார். விரைவில் நாடாளு மன்ற தேர்தல்களை சந்திப்போம் என கூறி அதற்காக களத்தில் இறங்கி மும்முறமாக வேலை செய்து வருகிறார்.
மேலும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முதல் கட்ட வேலைகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் அவர் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பாலசந்தர் என்பவர் காலமாகியுள்ளார். இதற்கு கமல்ஹாசன் தன் டிவிட்டர் பக்கம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நமது நற்பணி இயக்கத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக நம்மோடு பயணித்த சேலம் மாவட்ட நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு.K.பாலசந்தர் விடைபெற்றுக் கொண்டார்.அவரை எப்போதும் நினைவுகூர்வோம்.அவரது குடும்பத்தாருக்கும்,அவரோடு இணைந்து இத்தனை ஆண்டுகாலம் இயங்கி வந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 4, 2019