பிக்பொஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் கமல்ஹாசன் லொஸ்லியாவிற்கு அறிவுரை கூறி வருகிறார். இதனை வெளிப்படுத்தும் புரோமோ காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.
இந்த காட்சியில் பிக்பொஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல், யார் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி யோசிக்காமல் விளையாடுங்கள் என்ற வகையில் லொஸ்லியாவிற்கு அறிவுரை கூறுகிறார்.
அத்துடன் உங்களுக்கு ஒருவரின் கையை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் உங்களுடைய கைகளை பிடித்துக்கொள்ளுங்கள் என்பதை கூறும் வகையில் இன்றைய புரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பதாக கூட “பிக்பொஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் அங்கு உள்ளவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது அல்லவா? அவ்வாறு நினைத்துக்கொண்டு விளையாடுங்கள் ” என அறிவுறைக் கூறியிருந்தார்.
ஆரம்பத்தில் கவினுடன் நட்புடன் பழகிவந்த லொஸ்லியா, தற்போது அவரை காதலித்து வருகிறார். இதன் காரணமாக கமல்ஹாசன் ஒவ்வொரு முறையும் லொஸ்லியாவிற்கு அறிவுறைகூறி வருகின்றார். இருப்பினும் கமலின் அறிவுறையையும் மீறி லொஸ்லியா கவினுடன் பழகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Day70 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/PClv5cx39E
— Vijay Television (@vijaytelevision) September 1, 2019