உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் கால்பதித்து 60 வருடம் நிறைவு பெற்றுள்ளதை நினைவு கூறும் வகையில், நடிகர் சூர்யா ஒரு புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதுகுறித்து சூர்யா தெரிவிக்கையில், நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை எல்லா இரசிகர்களுடன் சேர்ந்து ஒரு இரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் பார்க்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் 1960ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல துறைகளில் சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.