நடிகை வரலட்சுமி மற்றும் விமல் இணைந்து நடித்துள்ள கன்னிராசி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த திரைப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் வெளியாகவிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.