கதைக்கு தேவை என்றால் எவ்வாறான கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.
நடிகை ரெஜினா தனது சினிமா அனுபவங்கள் குறித்து வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது.
எவ்வாறான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன். இப்போது சினிமாவில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது எனது நிஜ வாழ்க்கையிலும் பயன் அளிப்பதாக உள்ளது.
படம் தோல்வி அடைந்தால் அதில் நான் என்ன தவறு செய்து இருக்கிறேன் என்று யோசிக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னை பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன்.
நான் படத்தில் என்ன தவறு செய்து இருக்கிறேன். என்னால் படத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சிந்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.