நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வாயை ‘மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ படங்களை தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘வான்’ போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் ரித்து வர்மா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரக்ஷன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மசாலா கஃபே குழுவினர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் Viacom 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.