பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெளியேற போவது யார் என்ற முடிவில் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.. இதில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், பாத்திமா, ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த வார பிக்பாஸில் வெளியேற போது யார் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் பாத்திமா பாபு தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியே வந்திருந்தது..
அதனை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் கமல் வெளியேறுவதற்கு முன் யாரை காப்பாற்றி இருக்கிறார்கள் மக்கள் என்பதை பற்றி பார்ப்போம் என்று கூறினார். அதில் ஹவுஸ்மேட் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் என்று கூறியதும், கண்ணீர் விட்டு கதறி அழுதார் மதுமிதா..
மேலும் மற்ற போட்டியாளர்கள் இதை ஏற்க மறுத்ததை காணமுடிந்தது.. ஆனந்த கண்ணீர் வடித்த மதுமிதாவிற்கு பாத்திமா பாபு ஆறுதல் கூறி மக்களுக்கு என்ன வேணும் என்பதை சொல்லிருக்காங்க என்று தைரியமா இரு என்று ஆறுதல் கூறியுள்ளார்..