சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளத்தில் ஓஹோவென ஒரே நாளில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அவரை இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடர்ந்தனர்.
பின் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் அதை தவிர்த்து வந்தார். அதே நேரத்தில் அவர் விளம்பரத்திலும் நடித்து வந்தார். தற்போது பிரசாந்த் மாம்புள்ளி என்ற மலையாள இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம்.
ஹிந்தியில் உருவாகும் இப்படத்திற்கு ஸ்ரீதேவி பங்களா என பெயர் வைத்திருக்கிறார்களாம். பிரசாந்த் மோகன்லாலை வைத்து 19 மணி நேரத்தில் மலையாளத்தில் பகவான் என்ற ஆக்ஷன் படம் எடுத்தவர் என்ற சிறப்பை பெற்றவராம்.