நடிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் சிம்பு.
பிறருடைய இசையில் பல பாடல்களைப் பாடியுள்ள சிம்பு, சந்தானம் ஹீரோவாக நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். பின்னர், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்ததால் பிஸியானார்.
இருந்தாலும், ஓவியா நடித்துள்ள ‘90 எம்எல்’ படத்துக்கு இசையமைத்து வருகிறார் சிம்பு.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துவரும் சிம்பு, கிடைக்கும் இடைவேளையில் இசையமைத்து வருகிறார்.
ட்ரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து சிம்பு இசையமைக்கும் வீடியோவை, ‘90 எம்எல்’ படத்தின் இயக்குநரான அனித உதீப், ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா இருவரும் நடிக்கின்றனர். பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு முடியாததால் பொங்கலுக்கு ரிலீஸாவது சந்தேகம் என்கிறார்கள்.