நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
களவாணி, கலகலப்பு ,மெரினா போன்ற திரைப்படங்களில் நடித்த ஓவியா திரைப்பட வாய்ப்புகள் இன்றி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்குக்கேற்று தனது நேர்மையான குணத்தின் மூலம் மக்களின் அன்பு மட்டுமின்றி திரைப்பட வாய்ப்புகளும் ஓவியாவுக்கு குவிந்தன.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குளிர் 100 டிகிரி திரைப்படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள திரைப்படம் 90ml.
அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியானது அதில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு வெளியிட்டது. இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ள இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஓவியா ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்,”பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த படம் வெளியாகவிருப்பதாகவும் முதல்முறையாக அதிகாலை ஐந்து மணி காட்சியும் திரையிடப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஐந்து மணி காட்சியின் போது தான் ரசிகர்களைத் தியேட்டரில் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.