நடிகை திவ்யா ஸ்பந்தனா. ரசிகர்கள் பலருக்கும் இவரை குத்து ரம்யா என்றால் தான் அடையாளம் தெரியும். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அவரின் தங்கை கீர்த்தனா தேவி என்றழைக்கப்படும் சஹானா இப்போது திரைத் துறையில் கால் பதித்துள்ளார். கன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். சிம்புவுடன் இவர் நடித்த குத்து திரைப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.
இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் உள்ளே ஜெயின்ட் ஹில்டா பள்ளியில் முடித்தார். பட்டப்படிப்பை பெங்களுரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்க தொடங்கினார் ஆனால், சினிமாவில் நடிக்கவேண்டி இருந்ததால் படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டார்.
இப்போது சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றி வருகிறார். இவருடைய சமீபத்திய புகைப்டங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. உடல் எடை ஏறி பார்த்தவுடன் அடையாளம் காண முடியாதபடி மாறியுள்ளார் குத்து ரம்யா.