நடிகை ரம்யா கிருஷ்ணன், பாகுபலி – 1ம், 2ம் பாகங்களுக்கு பிறகு, அகிலின் ‘ஹலோ’ மற்றும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய 2 படங்களில் நடித்திருந்தார். தற்போது, நாகசைத்தன்யாவின் தெலுங்கு படமான ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’வில் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 31ம் திகதி ரிலீஸாக உள்ளது.Ramya Krishnan five language movie firstlook
இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ராணி சிவகாமி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மது மினகனகுர்கி இந்த படத்தை இயக்குகிறார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாராகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஷா பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது.