பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நிகழ்ச்சியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதால் பிரபலங்களும் அதற்கு போட்டியாளர்களாக வருகின்றனர்.
தமிழில் சமீபத்தில் பிக்பாஸ் துவங்கிய நிலையில், வரும் 21ம் தேதி தெலுங்கில் துவங்குகிறது. அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர் என தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகர்ஜூனாவுக்கு ஒரு எபிசோடுக்கு 12 லட்சம் சம்பளமாக தரப்படுகிறது என்பது தான்.
கணக்கிட்டால் நாகர்ஜுனா சுமார் 4 கோடி ரூபாயை இந்த சீசனுக்கு மட்டும் சம்பளமாக பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.