ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சுவாமி ‘ஐயப்பன்’ குறித்த ஒரு திரைப்படத்தில் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா, இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அதேநேரம், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்ககும், இத்திரைப்படத்தை ஸ்ரீகோகுலம் கோபாலன் என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.
இத்திரைப்படம் இதுவரை வெளிவராத வகையில் பிரமாண்டமான ‘ஐயப்பன்’ திரைப்படம் என்றும், கணினி கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பல கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பட்டுள்ளது.