இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படம் 10 ஆண்டு முடிந்ததை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பங்கேற்றார்.
அதில் அவரது மகள் கதிஜாவும் கலந்துகொண்டு ரகுமானுடன் உரையாடினார். விழாவுக்கு அவர் முகம் கூட மறையும் அளவுக்கு உடை அணிந்து வந்திருந்தார்.
அதற்கு ரகுமானை விமர்சித்து சிலர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வந்தனர். இதுபற்றி பேசியுள்ள நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், “அவர் சொந்த விருப்பத்தில் கூட அப்படி உடை அணிந்து வந்திருக்கலாம். நமக்கு தெரியாது. ஒருவர் சொந்த விருப்பத்திற்கு இருக்க அனுமதிப்பது தான் அவர்களுக்கு ஒரு அதிகாரத்தை தரும்” என தெரிவித்துள்ளார்.
Could be , she is wearing out of her own choice, we don’t know , right? I believe freedom of choice is true empowerment. https://t.co/qF4WozDLbi
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) February 6, 2019