நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. அதே வேளையில் விடுமுறை காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் தேர்தல் அறிவிப்பால் சில படங்கள் தள்ளி போக வாய்ப்புள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தேர்தல் இப்போதெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தெலுங்கு சினிமா சிட்டியான ஹைதராபாத்தில் The Movie Artists Association (MAA) கடந்த இரு நாட்களுக்கு முன் தேர்தல் நடைபெற்றது.
இதில் 268 ஓட்டுக்கள் பெற்ற நடிகர் வி.கே.வெங்கடேஷ் புதியதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடன் போட்டியிட்ட நடிகர் சிவாஜி ராஜா மொத்தம் 199 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளார்.
மொத்தம் 780 ஓட்டுகளுக்கு 480 மட்டுமே பதிவாகியுள்ளது. பல நடிகர்கள், நடிகைகள் ஓட்டளிக்க வரவில்லை. இதில் ரகுல் பிரீத் சிங், சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தேர்தல் மையத்தில் வரவில்லை என சொல்லப்படுகிறது.
அதே போல நடிகர்கள் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன், வெங்கடேஷ், என்.டி.ஆர், ராம் சரண் என பலரும் ஓட்டளிக்கவில்லை என தெரிகிறது.