ஹைதராபாத்: செலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார்.
தான் புகார் தெரிவிக்கத் துவங்கியதில் இருந்து தன்னை திரையுலகினர் ஒதுக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அல்லாடுவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கையில் பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். செலவுக்கு பணம் இல்லை, உடலில் தெம்பு குறைகிறது இருப்பினும் நான் தொடர்ந்து போராடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
நடுத்தெருவில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய பிறகு அவரை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் தெரிவித்தாராம். இத்தனை கஷ்டங்களுக்கு இடையே தான் போராடி வருவதாக கூறுகிறார் ஸ்ரீ ரெட்டி.
நான் பப்ளிசிட்டி தேட பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவதாக கூறுகிறார்கள். ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் செய்தி தலைப்பில் இருப்பதற்காக யாராவது தனது வாழ்க்கையுடன் விளையாடுவார்களா என்று ஸ்ரீ ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.