நடிகை ஹன்ஷிகா ஒரு காலத்தில் உச்ச நடிகை. இவரது கால்ஷீட்டுக்காக முன்னணி நடிகர்கள் கூட தங்களது படங்களை தள்ளி வைத்தனர். தமிழ், தெலுங்கு என பம்பரமாக சுற்றி வந்த அம்மணியின் மார்கெட் தற்போது அதள பாதாளத்தில் கிடக்கிறது.
அந்த படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வருவதோடு சரி. பின்னர், அந்த படங்கள் என்ன ஆனது..? ஏது ஆனது..? என்ற விபரங்கள் தெரியவில்லை. அவ்வப்போது விளம்பர படங்களிலும், கடை திறப்பு விழாக்களில் தென்பட்டு வந்தார். தற்போது அதுவும் கிடையாது.
மேலும், தன்னுடைய நேரங்களை பார்டியில் கலந்து கொள்வதன் மூலம் கடந்து வருகிறார். மேலும், இரண்டு சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருவதாக தகவல். ஆனால், அந்த படங்களில் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை. ரிலீசாவதற்குண்டான அறிகுறியும் தெரியவில்லை.
இவருக்கு முன்னாள் அறிமுகமான நடிகைகள் இன்னும் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்த ஹன்சிகா இப்படி ஆகிட்டரே என்று வருத்தத்தில் உள்ளனர் திரையுலக வட்டாரத்தினர்.