மிழ் மற்றும் தெலுங்கு , இந்தி என மூன்று மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சில நடிகைகள் திரையுலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தபோது, நான் அப்படியான சூழ்நிலையில் இல்லை. சினிமாவில் அப்படியான பிரச்சனைகள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை.
என்னுடன் இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவருமே நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார்கள் என்று தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்..? என்பது குறித்து ரகுல் பிரீத் சிங் கூறுகையில், என்னை திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் ஏழையாக இருந்தாலும் சரி, என்னை நேசிப்பவராகவும் நல்லவராகவும் நாட்டு நடப்புகள் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக என்னை சிரிக்க வைக்க தெரிந்தவராக இருக்கவேண்டும். அதோடு, நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். அதனால் அவர் குறைந்தபட்சம் 6 அடி உயரம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.