எனது தோளில் நடிகர் திலீப் கைவைத்தபடி போஸ் கொடுத்தபோது எனக்கு படபடப்பு அதிகமானது என்று நடிகைா நவ்யா நாயர் தெரிவித்தார்.
கேரளத்தைச் சேர்ந்த நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
இரு மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்த நவ்யா, கடந்த 201-இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த நவ்யா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் நான் நடித்த முதல் படம் மலையாளத்தில் வெளிவந்த இஷ்டம் படம். இது 2001-இல் வெளியானது. டைரக்டர் சிபி எனது போட்டோவை பார்த்து விட்டு ஒரு ஹோட்டலுக்கு வருமாறு கூறினார்.
எனது நடிப்புத் திறமையை அங்கு பரிசோதனை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். அதை பார்த்த திலீப்புக்கு எனது நடிப்பு பிடித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இஷ்டம் படத்தில் நடிக்க திலீப்பும் மஞ்சு வாரியரும் தேர்வு செய்தனர்.
அப்போது மட்டும் நான் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கியிருந்தால் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. அந்த படப்பிடிப்புக்காக போட்டோ ஷூட் எடுத்தனர். அப்போது திலீப் எனது தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். உடனே எனக்கு படபடப்பு ஏற்பட்டது. இதய துடிப்பும் அதிகமானது.
கிராமப்புறத்தில் இருந்து வந்த எனக்கு ஒரு ஆணின் கைப்பட்டவுடன் கடும் சங்கத்துக்குள்ளானேன். இதை பார்த்த திலீப் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். தைரியம் கூறினார். அதை என்னால் மறக்கவே முடியாது என்று நவ்யா நாயர் கூறினார்.