நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகிவரும் ‘ஜாக்பாட்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
எதிர்வரும் ஒகஸ்ட் 2ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் நிகழ்வில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பேசிய படத்தின் கதாநாயகியான நடிகை ஜோதிகா, ”முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கின்றேன். இது எனக்கு மிகவும் புதிதான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. இப்போதைய கதாநாயகர்கள் என்னன்ன பண்றாங்களோ அது எல்லாவற்றையும் தங்களையும் இந்தப் படத்தில் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
படத்தின் பாடல்கள் மிகவும் அருமை. பெண்களுக்கு சக்தியூட்டுவதுபோல இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். அந்த அளவுக்குக் கடுமையாக உழைத்திருக்கின்றோம்.
என்னுடைய ‘ஜாக்பாட்’டும் சூர்யாதான். அவர்தான் என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. இந்தப் படத்தில் நான் போட்ட சண்டைக் காட்சிகளுக்கான உபகரணங்களை சூர்யாதான் எனக்கு வாங்கிக் கொடுத்தார்.
பெரும்பாலும் நடிகைகள் நடித்தப் படங்களை அந்தந்தப் படங்களின் கதாநாயகர்களோடுதான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய கதாநாயகிகளோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்” என கூறியுள்ளார்.
இதனைத் தொடந்து நடிகர் சூர்யா கருத்து தெரிவிக்கம் போது, ”இன்றைய கதாநாயகர் படத்தின் இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகர்தான். ஜோதான் என்னுடைய ‘ஜாக்பாட்’. 100 சதவிகிதம், 200 சதவிகிதம் எந்த கொம்ப்ரமைஸூம் இல்லாமல் சரியாகச் செய்யும் அம்மாதான் ஜோதிகா.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்துதான் தேர்வு செய்கிறார். ஜோதிகாவுக்கு இந்தப் படம் சரியான படம். சில ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து ஜோ எப்படி இதையெல்லாம் செய்தார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறு மாதங்கள் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் இந்தப் படத்தின் மூலமாக நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என தெரிவித்தார்.
இத்திரைப்படத்தில் ஜோதிகாவும் ரேவதியும் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்னர்.
இயக்குநர் கல்யாண் எழுதி இயக்கியுள்ள கலக்கலான நகைச்சவை நிறைந்த ஆக்க்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.