பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிம்ரன் இடம்பெற்றிருக்கும் புதிய புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சன்பிச்சர்ஸ் சமீபத்தில் படத்தின் பாடல்களை வெளியிட்டிருந்தனர். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் “காளி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி “ஜித்து” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தை பார்த்த தணிக்கை துறை அதிகாரிகள் படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த நிலையில் படத்தில் இருந்த நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. உங்களுக்காக இதோ…