நடிகை திரிஷா தற்போது மோகினி என்ற ஒரு ஹாரர்-திரில்லர் படத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமதமாகிக்கொண்டே போன இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா. இந்த படம் குறித்தி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், இந்த படத்தின் நான் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் வைஷ்ணவி, மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் மோகினி.
இந்த இரண்டு கதாபாத்திரங்களில் மோகினி என்ற பேய் கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவலாக இருந்தது. எனக்கு பேய் நம்பிக்கை உண்டு. பேய் என்றாலே நான் மிகவும் பயப்படுவேன். ஆனால், இந்த படத்தில் நானே பேயாக நடித்துள்ளேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், நான் இனிமேல் ஹீரோயின் சப்ஜெக்டில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறுகிறார்கள். ஆனால், அப்படி கிடையாது, கமர்ஷியல் படங்களிலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். சதுரங்க வேட்டை 2 மற்றும் விஜய் சேதுபதியுடன் 96 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் திரிஷா.