தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாகவும் பரபரப்பை கிளப்பினார். மேலும் அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்.
பின்னர் நாளடைவில் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலித்து வருவதாகவும், ஒன்றாக பல இடங்களில் சுற்றுவதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் பரவுகிறது.
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஓவியா கூறுகையில் , நான் ‘ராஜ பீமா’ படத்தில் ஓவியாவாகவே, கௌரவ தோற்றத்தில் நடிக்கிறேன். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால் , நிறைய சண்டைகள் வந்தது.
ஆனால் இப்பொழுது நாங்கள் சமாதானமாகி விட்டோம். இந்நிலையில் நானும் ஆரவ்வும் திருமணம் செய்துகொண்டோம் லிவிங் டு கெதர்ல வாழ்கின்றோம் எனவும் பல வதந்திகள் பரவி வருகிறது. எல்லாமே பொய்.
ஆரவ் என் நல்ல நண்பர், மேலும் எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சுதந்திரமா தன்னிச்சையாக செயல்படும் பெண்.எனக்கு கல்யாணம் எந்தவிதத்துல செட் ஆகும்னு தெரியவில்லை பார்க்கலாம் என ஓவியா கூறியுள்ளார்.