நீயா-2 என்ற படத்தில் ஜெய், வரலட்சுமியுடன் நடித்து முடித்துள்ளார் நடிகை ராய் லட்சுமி. விரைவில் வெளியான இப்படத்தில் பாம்பு வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்திய பேட்டியில் தனது முதல் படமான கற்க கசடற படப்பிடிப்பு அனுபவங்களை பற்றியும் தளபதி விஜய்யை பற்றியும் பகிர்ந்துள்ளார். அதில், விஜய் மிகவும் அமைதியானவர் என்பதை எனது முதல் படத்தின் உணவு இடைவெளியின் போதே அறிந்து கொண்டேன். ஏனென்றால் அந்த உணவு இடைவெளி படத்தின் ஹீரோ விக்ராந்த் மற்றும் அவரது கசின் தளபதி விஜய்யுடன் தான் நடந்தது.
விஜய் சிறந்த நண்பர் மற்றும் சிறந்த மனிதர். கொஞ்சம் கூச்சம் சுபாவம் கொண்டவர், பிறரிடம் அவர் பேசும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைவரையும் விஜய் மதிப்பார். அவர் பேசுவதையே நான் குறைவாக தான் பார்த்துள்ளேன். ஆனால் அவர் ஒருவரிடம் பேசினால் அதில் ஒரு பாயிண்ட் இருக்கும் என்றார்