சிவாவுடன் தொடர் கூட்டணியில் அஜித்திற்கு 4 வது படமாக விஸ்வாசம் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாகிவிட்டது. ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களுக்கு இது விஸ்வாசம் திருவிழா தான்.
பார்க்கும் இடங்கள் எல்லாம் விஸ்வாசம் போஸ்டர், பேனர், கட்டவுட்டுகளாக தான் இருக்கின்றன. படத்தின் டிரைலர் மேலும் எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில் பலரின் ஆர்வமும் கூடியுள்ளது.
இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் நடித்துள்ளார். இதற்கு முன் சர்கார் என பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு இப்படம் ஒரு தனி ஸ்பெஷல் தான். அவருக்கு விஸ்வாசம் 100 வது படம் என்பதால் தன் மகிழ்ச்சியை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
— Yogi Babu (@iYogiBabu) January 9, 2019