தளபதி விஜய் எப்போதும் அமைதியாகவே தான் இருப்பார். அவர் பொது இடங்களில் பேசுவது அவரை தவிர வேறு யாருக்கும் கேட்காது, அந்த அளவிற்கு அமைதியானவர்.
இவர் இப்போதே இப்படி என்றால், ஆரம்பக்கால கட்டத்தில் நடிக்க வந்த போது, எப்படியிருந்துப்பார்.
ஆம், பல வருடங்களுக்கு முன்பு விஜய் நடிக்க வந்த போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் இவரின் சினிமா ஆர்வம் பற்றி ஒரு கேள்வி வைக்கப்பட்டது.
அதற்கு விஜய் ‘என் அப்பா, அம்மா திரையுலகில் இல்லை என்றாலும் நான் ஒரு நடிகன் ஆகியிருப்பேன்.
என்ன சில காலம் ஆகியிருக்கும், அவர்கள் எனக்கு ஒரு ரூட் மட்டுமே போட்டுக்கொடுத்தார்கள், மற்றப்படி என் உழைப்பால் நான் இந்த இடத்தை அடைந்தேன்’ என கூறியுள்ளார்.