பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இரண்டு படங்களுக்குமே நல்ல விமர்சனங்கள் தான் கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் பேட்டயை விட பல மடங்கு வசூல் அதிகம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எப்படியும் ரூ 5 கோடி வசூல் அதிகமாக இருக்கும் என தெரிகின்றது, அதேபோல் பேட்ட வெளிநாட்டில் விஸ்வாசத்தை விட பல மடங்கு வசூல் அதிகம் என கூறப்படுகின்றது. அதிலும் திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் எல்லாம் பேட்டயை விட விஸ்வாசம் பல மடங்கு வசூல் அதிகமாம்.
எது எப்படியோ அடுத்த 8 நாட்களுக்கும் தமிழகத்தில் வசூல் வேட்டை தான்.