பிக்பாஸில் எப்போதும் போல சிறுக சிறுக மோதல்கள், சண்டைகள் ஆரம்பமாகி வருகின்றன. காலையில் வந்த ப்ரோமோவில் மதுமிதா, வனிதாவிற்கு இடையே செம்ம சண்டை மூழ்கிறது.
அதன்படி தற்போது வந்துள்ள ப்ரோமோவில் கவினிற்கும் மீராவிற்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ரூல்ஸ் படித்த எனக்கு தெரியாதா? உனக்கு அறிவே கிடையாதா? என கவின் சீறி பாய உடனே மீரா, முதலில் நீ பேசாதே என்று கூறுகிறார்.
இதற்கிடையில், மோகன் வைத்தியா, வயதிற்கு மரியாதை கொடு, மற்றவர்களிடம் பேசுவதுபோல் என்னிடம் பேசாதே என மீராவிடம் கோபத்தை காட்டுகிறார். இதை எதற்காக அவர் மீராவிடம் கூறுகிறார். வனிதா, மதுமிதா சண்டை எதற்காக என்பதெல்லாம் இன்று இரவு பிக்பாஸ் பார்த்தால் தான் தெரியவரும்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo2 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/I4z2Jnh9Qk
— Vijay Television (@vijaytelevision) July 2, 2019