1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணரத்தினம் இயக்கத்தில் உருவாகிய அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் தலைப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.
முற்றிலும் மாறுப்பட்ட கதையம்சத்துடன் உருவாகும் இந்த திரைப்படத்தில் உதயா, விதார்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
அறிமுக இயக்குனரான சரண் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு பா.விஜய் பாடல் எழுதவுள்ளதாகவும், சான் லோகேஷ் படதொகுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இம்மாதத்தில் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஏனைய அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.