தமிழில், கேடி, நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. சமீபகாலமாக பாலிவுட் படங்களில் நடித்து வரும் இலியானா, தனது ஆஸ்திரேலிய பாய்பிரண்ட் ஆண்ட்ரூ என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம், சில மாதங்களுக்கு முன்பே ஆண்ட்ரூ தான் எனது கணவர் என்று தனது இணைய பக்கத்தில பதிவிட்டிருந்தார் இலியானா.இந்நிலையில், தற்போது இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பாலிவுட் மீடியாக்கள் இலியானாவிடம் கேட்டபோது, அதுப்பற்றி கூற மறுத்துவிட்டார்.
மேலும், தற்போது உடல் எடை கூடி தன்னுடைய ஒல்லியான இடுப்பை பெருக்க வைத்துள்ளார் அம்மணி. தொடர்ந்து, அன்பானவன் அடங்காதவ்வன் அசராதவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான அமர் அக்பர் அந்தோணி என்ற படத்தின் தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.