சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக ராஜா ராணி சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
அப்படியிருக்கும் நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் சஞ்சீவுக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதால் ஆலியா கோவில் கோவிலாக சென்று கடவுளை வேண்டிக் கொள்வது போல காட்டப்பட்டது.
இதனை தற்போது நெட்டிசன்கள் படுபங்கமாக கலாய்த்தெடுத்து வருகின்றனர். அதில் நெட்டிசன்கள் ஒருவர் பதிவிட்டு இருந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது