ஹிந்தியில் மட்டும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இரண்டு மொழிகளிலும் தலா ஒரு சீசன் முடிந்துள்ளது.
ஆரம்பத்தில் இரண்டு மொழி ரசிகர்களிடம் பயங்கர எதிர்ப்பை சம்பாதித்த இந்த நிகழ்ச்சி பிறகு அனைவரின் விருப்பமான நிகழ்ச்சியாக மாறிப்போனது.
அந்த வகையில், தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன் படி, நடிகர் நாணி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இது நாணி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் #RRR படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் காரணமாகவே பிக்பாஸ் சீசன் 2-ல் இருந்து அவர் விலகி விட்டதாக கூறுகிறார்கள்.
. @StarMaa welcomes @NameisNani as the host for #BiggBossTelugu2 ? We wish you a BIGG success ? pic.twitter.com/VMx9V7Th4R
— STAR MAA (@StarMaa) May 18, 2018