சினிமாவில் சாதனை புரிந்துள்ள இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று முதற்கட்டமாக கவர்னர் கலந்துகொள்ள நிகழ்ச்சி நடந்தது.
அதில் ஹைலைட்டாக ஏ.ஆர். ரகுமான் வாசிக்க இளையராஜா பாடியது வைரலானது. இன்றும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அதே இடத்தில் நடக்கிறது, இதில் சினிமாவில் உள்ள பிரபல கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.
உடனே அஜித்-விஜய் கலந்துகொள்கிறார்களா என்ற கேள்வி எழும்பி வருகிறது. நமக்கு கிடைத்த தகவல்படி விஜய் கலந்துகொள்வது மட்டும் உறுதி என கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி ரஜினி, கமல், சூர்யா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கின்றார்களாம்.