இளையராஜாவின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 2 நாட்கள் பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பலகோடி வரையில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கே.ராஜன், எஸ்.வி.சேகர் ஆகியோர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்க்ள.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்கள், “இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்றால் அவருக்கு மரியாதை செய்து ஒரு விருது வழங்கமுடியுமே தவிர, மூன்றரை கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
தயாரிப்பாளர்கள் பணத்தில் வாழ்ந்த இளையராஜா, தயாரிப்பாளர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமே தவிர, அந்தத்தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே மூன்றரை கோடி வாங்கிவிட்டு, அவருக்குப் பாராட்டு விழா நடத்திக் கொண்டது உலக மகா அதிசயம்.
நடிகர்கள் நந்தா, ரமணா இருவரும் இணைபிரியாத விஷாலின் உயிர் நண்பர்கள். ரமணா தான் மூன்றரை கோடி எடுத்து மேடை அமைத்தது. எத்தனையோ பரிதாபப்பட்ட தயாரிப்பாளர்களின் பணம் இது. அந்தப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்வது என்பது திருட்டுக்குச் சமமான விடயம். அதை நடிகர் விஷால் செய்திருக்கின்றார். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள் என்று தெரியவில்லை”எனக் கூறியுள்ளனர்.