இசைஞானி இளையராஜா தனது பாடல்களை உரிய அனுமதி பெற்ற பிறகே பொது நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என கூறியிருந்தார். இந்த விஷயத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த காப்புரிமை பிரச்சனைக்கு தனது கருத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய நிருபர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
அதில், ஒரு பாட்டு ரெக்கார்ட் செய்ய அதற்குரிய சூழ்நிலையை சொல்கிறோம். பாட்டு எழுதுபவருக்கு சம்பளம் கொடுக்கிறோம். ஒரு 20 வயலின் போட வேண்டும் என சொல்கிறார், பணம் கொடுக்கிறோம்.
இவ்வளவு பணம் செலவு செய்து ஒரு பாடலை தயாரிப்பாளர் சொந்தமாக்கி கொள்கிறார். அதனால் அந்த பாடல் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் தான் சொந்தம் என இளையராஜாவை சாடி பேசியுள்ளார்.