இளையராஜாவின் 75 நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், அஜித் கலந்து கொள்ளாத நிலையில் முன்னணி நடிகர்களில் ரஜினிகாந்த், கமல் மேடையேறி உரையாற்றினர்.
அப்போது பேசிய ரஜினியிடம் உங்களுக்கு பிடித்த இளையராஜா பாடல் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அவரது எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும், ஒரு ஹீரோவுக்கு ’பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேற என்ன வேண்டும்.
இருந்தாலும் அவர் கமலுக்கு தான் நல்ல பாட்டுகளை அதிகமாக போட்டுருக்காரு என நகைச்சுவையாக கூறினார். இதற்கு இளையராஜா, நான் ஹீரோ முகத்தை பார்த்து மியூசிக் போடுறது இல்லை என்றார்.