சமீபகாலமாக அடல்ட் படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தொடங்கி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என படங்கள் வந்தன.
இவற்றிலிருந்து சற்று மாறுப்பட்டு பெண்களே இரட்டை அர்த்தத்தில் பேசுவது போல அமைந்துள்ளது அண்மையில் வந்துள்ள 90ml படத்தின் டீசர். ராஜா ராணி சீரியல் சஞ்சீவை வைத்து குளிர் 100 படத்தை இயக்கிய அனிதா உதூப் இப்படத்தை இயக்க ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
டீசரை பார்த்துவிட்டு சிலர் விமர்சித்து வந்தாலும் சர்ச்சைகளுக்கிடையில் 18 மணிநேரத்தில் 1 லட்சம் பார்வைகளை பெற்றது. ஒரு நாள் இரவில் 8 லட்சம் பார்வைகளை தாண்டி 24 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சிம்பு படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.