தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் விஜய். இவருடன் நடிக்க வேண்டும் அல்லது படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்பது நடிகர்களின் ஆசை.
அப்படி விஜய் 63வது படத்தில் பரியேறும் பெருமாள் என்ற படம் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கும் கதீர் நடிக்க இருக்கிறாராம். இந்த செய்தி அறிந்ததும் விஜய், கதீருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது தளபதி என்ன கூறினார் என்று கதிர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அவரின் போன் கால் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. அவர் என்னுடைய படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் நல்ல விமர்சனங்களை கேட்டேன், விரைவில் படம் பார்ப்பேன் வருங்காலத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுங்கள் என்றார்.
அடுத்தடுத்த படங்களுக்கும் வாழ்த்து கூறினார் அவர் பேசும்போது நான் ஒரு Positive Vibes உணர்ந்ததாக கதிர் பேசியுள்ளார்.