காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் “அவே”. இந்த படத்தை தயாரித்தவர் நடிகர் நாணி.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நித்யா மேனன். இந்த படத்தின் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறார். மேலும், சக நடிகை ஒருவருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நித்யா மேனன். பிறகு, நடிகர் நாணி கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு நடிகையுடன் லிப்லாக் செய்வது போன்ற காட்சியில் நடித்து கொடுத்துள்ளாராம். சுமார் ஐந்து டேக்குகள் ஆன பிறகே காட்சி சரியாக வந்ததாம். இது வரை கவர்ச்சியாகவே நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த நித்யா மேனன் இப்படி லெஸ்பியனாக நடித்திருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான்.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபகாலமாக, இரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிவிட்ட நித்தியாவின் மார்கெட். கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் எகிறும் என எதிர்பார்கிறார்கள் திரையுலக வட்டாரத்தினர்.