இரட்டை இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ராஜசேகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
ராபர்ட்-ராஜசேகர் ஆகிய இரட்டையர்கள் பாலைவனச்சோலை, கல்யாண அகதிகள், தூரம் அதிகமில்லை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் போன்ற படங்களை இயக்கியுள்ளனர்.
மேலும் இவர்கள் ‘ஒருதலைராகம்’ உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.