வடிவேலு கதாநாயகனாக நடித்து கடந்த 2006ல் வெளியாகிருந்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. விஜய்யின் புலி படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கயிருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகமாக இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படமாக்கும் வேலைகள் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. இதற்காக பிரமாண்ட செட்டுகளை போட்டு படமாக்கிய தயாரிப்பாளர் ஷங்கர், பிறகு வடிவேலு- இயக்குனர் இடையே ஏற்பட்ட தகராறால் செட்டுகளை பிரிக்க வேண்டிய நிலைமையானது.
ஆனால் வடிவேலுவை சமாதானம் செய்துவிட்டனர், படம் உருவாக உள்ளது என கூறப்பட்ட வந்த நிலையில், இன்னும் வடிவேலு படப்பிடிப்பில் கலந்த கொள்ளாததால் தற்போது யோகிபாபுவை வைத்து படமாக்கலாம் என படக்குழுவினர் யோசித்து வருகின்றனராம்.