நடிகர் வடிவேலு நடித்து சூப்பர்ஹிட் ஆன இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு, ஷூட்டிங் துவங்கி, பின்னர் அது பிரச்சனை காரணமாக நின்றது அனைவருக்கும் தெரிந்த கதை தான்.
ஷங்கர் தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது வடிவேலுவுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அது பற்றி படக்குழுவுடன் விசாரிக்கையில் அது வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
தற்போது வடிவேலுவே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். மீண்டும் ஷூட்டிங் நடத்துவது பற்றி சில பேச்சுவார்த்தை இரு தரப்பிடையே நடந்து வருகிறதாம். அது முடிந்ததும் ஷூட்டிங் துவங்கும் என கூறியுள்ளனர்.