சமூக வலைதளத்தில் இப்போதெல்லாம் அஜித் விஜய் ரசிகர்களின் போட்டிகள் அதிகமாகி வருகிறது. மாறி மாறி ஏதாவது செய்து டிரெண்டிங் விசயத்தில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
விஜய் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான சர்கார் பல டிஜிட்டல் சாதனைகளை செய்ததோடு வசூலையும் அள்ளிவிட்டது. அதே போல அஜித்திற்கு பொங்கல் ஸ்பெஷலாக விஸ்வாசம் வரவுள்ளது.
விவேகம் பட சாதனை இது முறியடித்தால் ரசிகர்கள் ஆனந்தமடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது போட்டியே சர்கார், விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்கு தான். சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் 72 மணி நேரத்திலேயே 600K லைக்குகளை பெற்றது.
அதே வேளையில் விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கி பாடல் 124 மணிநேரத்தில் அந்த லைக்குகளை அடைந்துள்ளது.