நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். தொடக்கத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும், போக போக வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார் எனவும், இதனை அவரது அரசியல் மேடையாகவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 2 டீசர் இப்போது வெளியாகியுள்ளது.மேலும், பிக்பாஸ் 2-விற்கான போட்டியாளர்களை தேடும் பணியில் இருந்தது பிக்பாஸ் குழு. இந்நிலையில், முதற்கட்டமாக 30 பிரபலங்களின் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த முதல் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படும் 14 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக அனுப்பப்படுவார்கள்.
நடிகைகள் இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், ஆலியா மானசா, ரக்ஷிதா, ஆகியோரும். நடிகர்களில் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.
மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த தகவல்கள், இளசுகளை குஷியாக்கியுள்ளது.