நடிகர் விஜய் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை. அவர் படம் என்றால் ஆரம்பம் முதல் ரிலீஸ் ஆவது வரை எதாவது சர்ச்சைகள் வரிசைகட்டி நிற்கும்.
தலைவா, கத்தி, மெர்சல், சர்கார் என பெரிய சர்ச்சைகள் சந்தித்த படங்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். ஆனால் அதையெல்லாம் தாண்டித்தான் விஜய் தமிழ் சினிமாவில் சாதித்து வருகிறார்.
இந்நிலையில் ‘தி ஹைவே மாபியா’ என்கிற நாவலை எழுதிய சுசித்ரா எஸ் ராவ் என்பவர் அதை படமாக்கும் முயற்சியில் இறங்கியுளளார். மாடு கடத்தலை தடுப்பது பற்றிய இந்த புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சர்ச்சையான கதையில் விஜய் தான் நடிக்கவேண்டும் என சுசித்ரா கூறியுள்ளார். காரணம் சர்ச்சை /எதிர்ப்பு வந்தால் விஜய் மட்டும் தான் அதை சமாளிப்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடாவில் யாஷ், ஹிந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்கவேண்டும் என ஆசைப்படுவதாக அவர் பேட்டியளித்துள்ளார்.