இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.
சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பி.எம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது.
மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இத்திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி.எம் நரேந்திர மோடி திரைப்படம், வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் அதிக கவனத்தை ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.